செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 13 நவம்பர் 2016 (19:34 IST)

இரக்கமில்லாமல் 52 பேரை கொன்று குவித்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்

பாகிஸ்தானில் உள்ள வழிபாட்டு தளத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 52 பேர் பலியாகினர்.


 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் லஸ்பெல்லா மாவட்டத்தில் தர்கா ஷா நூரணி என்ற பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு தினமும் மாலை நேரத்தில் தாமல்’ என்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

நேற்று, மாலை வழக்கம் போல நடந்த நடன நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் வந்து இருந்தனர். அப்போது ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்கு வந்த ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் தன்னிடம் இருந்த குண்டுகளை வெடிக்க செய்தார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு கராச்சியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், சிகிச்சை பலனின்றியும் 12 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது.