சிலி நாட்டில் பயங்கர காட்டுத் தீ..! 100-ஐ கடந்த பலி எண்ணிக்கை..!!
சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையான நிலையில், தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிலி நாட்டின் வல்பரைசோ பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் அருகில் இருந்த ச
ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகின. மேலும் நூற்றுக்கணக்கான கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
இரண்டு நாட்களாக தீ கொழுந்து விட்டு எரிந்து வரும் நிலையில், காட்டுத் தீ பரவுவதை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்து வரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.
காட்டுத் தீ அச்சுறுத்தல் அதிகம் உள்ள இடங்களில் வசித்து வந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 200-க்கும் அதிகமாக இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதிகள் தீயில் கருகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த காட்டு தீயின் காரணமாக சிலி நாட்டின் கடற்கரை நகரங்களை சாம்பல் புகை சூழ்ந்து இருக்கிறது. அதிக வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.