1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (13:30 IST)

ஏர்போர்ட்தான் வீடு.. தாயை தேடி பட்ட பாடு! – பிரபல ‘டெர்மினல் மேன்’ நாசேரி மரணம்!

Terminal man
பாரீஸ் ஏர்போர்ட்டில் கடந்த 18 ஆண்டுகளாக அகதியாக வாழ்ந்து வந்த விமானநிலைய மனிதர் மெர்ஹான் க்ரீமி நாசேரி மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஈரான் நாட்டை சேர்ந்தவர் மெர்ஹான் கரீமி நாசேரி. இவர் தனது தாயை தேடி 1980 வாக்கில் ஐரோப்பாவுக்கு பயணம் செய்தார். இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து, ஜெர்மனி என பல நாடுகளுக்கு அவர் பயணித்த நிலையில் அவருக்கு குடியுரிமை இல்லாததால் அந்த நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அங்கிருந்து பாரிஸ் சர்வதேச விமான நிலையம் வந்த அவர் அங்குள்ள இரண்டாம் முனையத்தின் ஒரு பகுதியை தனது வீடாக்கி அங்கேயே வாழ்ந்து வந்தார். வாழ்நாள் முழுவதும் செய்தித்தாள்கள், புத்தகங்கள் படிப்பதிலும், எழுதுவதிலும் தனது வாழ்க்கையை அவர் செலவழித்தார்.


இவரது கதையை கேள்விபட்டு ஈர்க்கப்பட்ட பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் அவரது வாழ்க்கையை டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் ‘தி டெர்மினல்’ என்ற படமாக எடுத்தார். அதை தொடர்ந்து நாசேரி மிகவும் பிரபலமானார். 1999ல் பிரான்ஸ் அவருக்கு அகதி அங்கீகாரத்தை வழங்கியது.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் வழங்கிய தொகையில் அங்கு விடுதி ஒன்றில் வசித்து வந்த நாசேரி சில வாரங்கள் முன்னதாக மீண்டும் விமான நிலையத்திற்கு வந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K