1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (12:30 IST)

நீங்கள் சில ஆண்டுகளில் வேற்றுகிரக வாசிகளை நேரில் சந்திக்கலாம்!!

இன்னும் 25 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்றுகிரக வாசிகளை நேரில் சந்திக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


 
 
வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் அறிகுறிகளை அறிய கருவிகளை கண்டறிந்து உள்ளனர்.  
 
இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய புதிய திட்டம்  ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார். 
 
இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளூக்கு ரூ. 640 கோடி செலவிடப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார். 
 
இந்த திட்டத்தின் மூலம் பர்ட் கிரீன் பேங்க் தொலை நோக்கியும் நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது.