செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 மே 2019 (14:50 IST)

இன்ஸ்டாக்ராமில் வாக்கெடுப்பு நடத்தி இளம்பெண் தற்கொலை

இன்ஸ்டாக்ராமில் சாகவா/வாழவா என்று வாக்கெடுப்பு நடத்திய இளம்பெண் சாகவேண்டும் என்பதற்கு அதிக விருப்பங்கள் வந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மலேசியாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களை வெகுவாக ஈர்ப்பதும், கட்டுக்குள் வைத்திருப்பத்தும் சமூக வலைதளங்களே! ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்யும் அதே தளம் அழிவை நோக்கியும் கொண்டு செல்கிறது.

மலேசியாவை சேர்ந்த 16வயது இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாக்ராமில் உள்ள தனது ஃபாலோவர்களுக்கு “நான் வாழவா? சாகவா?” என்று கேட்டு பதிவிட்டிருக்கிறார். இதில் 69 சதவீத ஃபாலோவர்கள் ”சாகவேண்டும்”  என விருப்பம் தெரிவித்ததால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இது அவரது குடும்பத்தை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து மலேசிய இளைஞர் விளையாட்டு துறை மந்திரி சையத் சாஹித் அப்துல் ரஹ்மான் பேசுகையில், “நமது நாட்டு இளைஞர்களின் மனநிலையை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இது தேசிய அளவில்  முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினையாகும்” என தெரிவித்தார்.
 
இன்ஸ்டாக்ராமின் கம்யூனிகேசன் பிரிவு தலைவர் சிங் யீ வுன் இளம்பெண் தற்கொலை குறித்த தனது வருத்தங்களை பதிவு செய்தார். மேலும் இன்ஸ்டாவை உபயோகிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும் நாங்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாவை உபயோகிக்கும் யார் வேண்டுமானாலும் இது போன்ற அபயமான செயல்களுக்கு முன்னோடமான பதிவுகள், புகைப்படங்கள் குறித்து எங்களுக்கு உடனடியாக தகவல் அளிக்கவும், தவறான பதிவுகள் மீது புகார் அளிக்கவும் வசதி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.