மார்பகம் அருகே வளர்ந்த கைகள்: 14 வயது சிறுமியின் இக்கட்டான நிலை

Last Modified செவ்வாய், 31 ஜூலை 2018 (11:00 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சிறுமிக்கு அவரது மார்பகம் அருகே கைகள் போன்ற இரண்டு சதைப்பகுதி வளர்ந்து வருவதை அந்த பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 14 வயது சிறுமி வெரோனிகா. இவர் வயிற்றில் இருக்கும்போது இரட்டை குழந்தையாக உருவானார். ஆனால் இவருடன் உருவான இன்னொரு குழந்தையின் வளர்ச்சி சரியில்லாததால் அவரது உடல் இவருடைய உடலுடன் ஒட்டிக்கொண்டது.

வெரோனிகா பிறந்தபோது மார்பு பகுதியில் இருக்கும் சதைப்பகுதியை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் சில வருடங்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவரது பெற்றோருக்கு அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் வெரோனிகா வளர வளர அவருடன் கைகள் போன்று உள்ள சதைப்பகுதியும் வளர்ந்து வருகிறது. எனவே அவருடைய பெற்றோர், அவருடைய ஊர்மக்களின் துணையுடன் அறுவை சிகிச்சை செய்ய தாய்லாந்துக்கு அழைத்து சென்றனர். தற்போது வெரோனிகாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்து மற்ற சிறுமியை போல் உள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :