திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (15:05 IST)

நடுரோட்டில் நடனம் ஆடிய சிறுவன் கைது

சவுதி அரேபியாவில் நடுரோட்டில் நடனம் ஆடிய சிறுவன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.


 

 
சவுதி அரேபியாவில் 14 வயது சிறுவன் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் நடுவே நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரானது. இதையடுத்து அந்த சிறுவன் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 
போக்குவரத்து இடையூறு விளைத்த காரணத்தினால் கைது செய்யப்பட்ட சிறுவன், உரிய அபராதம் செலுத்திய பின் விடுவிக்கப்பட்டார். இதே போன்று கடந்த மாதம் சாலையில் கச்சேரி நடத்தியவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிறுவன சாலையில் நடனம் ஆடிய சம்பவம் 20ஆம் தேதி நிகழ்ந்துள்ளது.
 
சவுதி அரேபியாவில் ஏகப்பட்ட கட்டுபாடுகள் உள்ள நிலையில் இந்த சிறுவனின் ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அந்த சிறுவனை பாராட்டியுள்ளனர். சிலர் அந்த சிறுவனின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.