1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (08:40 IST)

டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர் நியமனம்!

டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர் நியமனம்!
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற டெல்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் அவர்கள் தமிழர் ஒருவரை தனது நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் நியமனம் செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவில் வாழும் தமிழர் அசோக் எல்லுசாமி என்பவர் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் வடிவமைப்பு குழுவுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த தகவலை எலான் மஸ்க் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மூலம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கூகுள் உள்பட பல நிறுவனங்களில் தமிழர்கள் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் நிலையில் தற்போது உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனத்தின் தமிழர் ஒருவர் முக்கிய பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை கிண்டியில் உள்ள மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் இளநிலைப் பட்டமும் அமெரிக்காவில் ரோபோ தொழில்நுட்ப படிப்பும் படித்தவர் அசோக் எல்லுசாமி என்பது குறிப்பிடத்தக்கது