வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (16:00 IST)

எங்களை ஏத்துக்கலைனா பாதிப்பு உங்களுக்குதான்..! – உலக நாடுகளை ஓப்பனாக மிரட்டும் தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியை ஏற்காவிட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தாலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் ஆட்சியமைத்துள்ளனர். இந்நிலையில் அங்கு சட்டத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தாலிபான்களின் ஆட்சியை முறையாக அங்கீகரிக்க உலக நாடுகள் பல மறுத்து வருகின்றன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என பேசியுள்ள தாலிபான்கள் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் “அமெரிக்கா பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவது சாத்தியமல்ல. ஆப்கானிஸ்தான் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். ஆப்கான் ஆட்சியையும், ஆட்சி நடத்தும் தலீபான்கள் இயக்கத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். உலக நாடுகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு தலீபான்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்” எனப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.