இந்த ராட்டினம் நல்லாருக்குல்ல..! குழந்தைகள் பூங்காவில் தலீபான்கள் குதூகலம்!
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள சிறுவர்கள் கேளிக்கை பூங்காவில் விளையாடும் காட்சிகள் வைரலாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகி கொண்ட நிலையில் தலீபான்கள் மொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் மற்ற நாட்டவர் உயிருக்கு ஆபத்து என்பதை தாண்டி ஆப்கானிஸ்தானிலேயே வசித்த தலீபான் எதிர்ப்பாளர்களுக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் பல ஆப்கன் மக்களுமே நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்று வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே தலீபான்கள் துப்பாக்கி சூடு நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூலை கைபற்றிய தலீபான்கள் அங்குள்ள சிறுவர் கேளிக்கை பூங்காவில் புகுந்து அங்குள்ள விளையாட்டு சாதனங்களில் ஏறி விளையாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.