திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (09:39 IST)

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வர மின்னணு விசா! – மத்திய அரசு நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானிலிருந்து மக்கள் அவசரமாக வெளியேறி வரும் நிலையில் மின்னணு விசா முறையை இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நாட்டை கைப்பற்றிவிட்ட நிலையில் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் நாட்டு மக்களை திரும்ப அழைத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும் முன்னதாக 129 பேரை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்ட நிலையில், இன்று 120 பேரை மீட்க சிறப்பு விமானத்தை ஆப்கானிஸ்தான் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரும் இந்தியர்கள் எளிதில் விசா பெற மின்னணு விசா முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. தலீபான்கள் ஆக்கிரமிப்பை தொடர்ந்து பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது தூதரகங்களை காலி செய்து வரும் நிலையில் இந்தியாவும் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.