1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 16 ஜனவரி 2023 (08:16 IST)

வீடு புகுந்து முன்னாள் பெண் எம்.பி. சுட்டுக் கொலை..!! அதிர்ச்சி தகவல்

gunshot
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் பெண் எம்பி வீடு புகுந்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் பெண்கள் கல்லூரியில் கல்வி கற்க கூடாது, பெண்கள் விளையாட்டு போட்டியில் விளையாட கூடாது, பெண்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது மற்றும் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெறக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்பி நபிஜாதா என்ற தலைவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரை வீடு புகுந்து மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றதாகவும் இதனால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த தாக்குதல் தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களுக்கு ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் முன்னால் பெண் என்பி சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva