செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.vadivel
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2016 (01:46 IST)

சுஷில் கொய்ராலா மரணம்: மோடி இரங்கல்

சுஷில் கொய்ராலா மரணம்: மோடி இரங்கல்

சுஷில் கொய்ராலா மரணம்: மோடி இரங்கல்
நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணத்திற்கு, இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா (79) நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்த நிலையில், சுஷில் கொய்ராலா இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், சுஷில் கொய்ராலா மறைவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
அதில்,  இந்தியா மதிப்புமிக்க நண்பரை இழந்து விட்டது என்றும்,  நேபாள நாட்டிற்காக பல ஆண்டுகள் உழைத்த உத்தம தலைவரை அந்நாடும், நேபாள காங்கிரஸ் கட்சியும் இழந்து வாடுகிறது. இந்த துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கும், நேபாள மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.