1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (09:00 IST)

பள்ளி விடுதியில் திடீர் தீ! - தீயில் 20 பேர் பலி பரிதாப பலி!

Fire
தென் அமெரிக்க நாடான கயானாவில் பள்ளி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மாணவர்கள் பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான கயானாவின் மஹ்டியா நகரில் பள்ளி ஒன்று விடுதி வசதியுடன் செயல்பட்டு வந்தது. அங்கு ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விடுதியின் ஒரு அறையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியுள்ளது.

விடியற்காலை நேரத்தில் மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் உஷாராகி வெளியேறுவதற்கு முன்னரே தீ நுழைவு வாயில்களை மூடியுள்ளது. சம்பவமறிந்து அந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் அதற்குள் விடுதியில் சிக்கிய 20 மாணவர்கள் பரிதாபமாக தீயில் கருகி மாண்டனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K