வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (12:10 IST)

எங்களை தாக்கினால் பணையக்கைதிகளை கொன்று விடுவோம்! – ஹமாஸ் பயங்கர எச்சரிக்கை!

Hamas
ஹமாஸ் குழு மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எங்களை தாக்கினால் பணையக்கைதிகளை கொல்வோம் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.



இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் குழு தாக்குதல் நடத்தியதுடன் இஸ்ரேலிய மக்கள் பலரையும் பணையக்கைதியாக பிடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் பதிலடியில் இறங்கியுள்ள இஸ்ரேல் ராணுவம் வான்வழி, தரை வழி என அனைத்து வகைகளிலும் காசா முனையில் தாக்குதல்களை தொடுக்க தொடங்கியுள்ளது.

காசா முனை அருகே உள்ள இஸ்ரேலிய பகுதிகளை ஹமாஸ் அமைப்பு கைப்பற்றியிருந்த நிலையில் அப்பகுதிகளில் ஹமாஸ் குழுவை தாக்கி மீண்டும் தங்கள் எல்லைகளை கைப்பற்றிய இஸ்ரேல் காசா நோக்கி முன்னேறி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் காசா முனை மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் பணையக்கைதிகளை கொல்வதுடன், அதை லைவ் வீடியோவாக வெளியிடுவோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K