இலங்கையில் போராட்டம் எதிரொலி: 58 கைதிகள் தப்பியோட்டம்!
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக தற்போது தீவிர போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் 58 கைதிகள் திடீரென தப்பி ஓடிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்
பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் ராஜபக்ச குடும்பம் உட்பட பல முக்கிய குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இலங்கையில் 58 கைதிகள் பயணம் செய்த பேருந்து மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்
இந்த தாக்குதலை பயன்படுத்தி அந்த பேருந்தில் இருந்து 58 கைதிகள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த கைதிகளை பிடிக்க எந்த நடவடிக்கையும் இலங்கை சிறைத்துறை எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது