வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (13:31 IST)

இலங்கை நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா ஏற்பு

மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
 
அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள், செஞ்சிலுவை சங்க மருத்துவமனை மற்றும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
 
இதற்கிடையே பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரரும் அதிபருமான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நேற்று கடிதம் அனுப்பினார். அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.