கருணாநிதி உடல்நலத்தை கேட்டறிந்த இலங்கை பிரதமர்

Last Modified வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (21:37 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆறு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலத்தை கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டறிந்து அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தினர்.
இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விசாரித்ததாக சற்றுமுன்னர் செய்தி வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இலங்கை அதிபர் சிறிசேனா அவர்கள் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும் என்று எழுதிய கடிதத்தை இலங்கை எம்பிக்கள் ஸ்டாலினிடம் கொடுத்துள்ள நிலையில் தற்போது இலங்கை பிரதமரே தொலைபேசியில் கருணாநிதி நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :