1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (13:35 IST)

உடல்நிலையில் முன்னேற்றம் : சக்கர நாற்காலியில் அமர்ந்த கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதியின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்படுகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

 
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது. மேலும், ராகுல்காந்தி வந்தபோது கண்கள் திறந்த நிலையில் வெளியான கருணாநிதியின் புகைப்படமும் திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், சக்கர நாற்காலியில் அமரும் அளவுக்கு அவரது உடலில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சையின் ஒருபகுதியாக அவர் சக்கர நாற்காலியில் அமரவைக்கப்படுகிறார் என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த 2 வாரங்களாக படுக்கையிலேயே இருந்த கருணாநிதி தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ளது அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதேபோல், கருணாநிதியின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.