ஞாயிறு, 4 டிசம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified வியாழன், 29 செப்டம்பர் 2022 (13:06 IST)

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை : அதிரடி உத்தரவு!

social media
இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக சமீபத்தில் பொது மக்கள் போராட்டங்களை நடத்தினர் என்பதும் இந்த போராட்டம் காரணமாக கோத்தபாய ராஜபக்ஷ மகிந்தா ராஜபக்சே உள்ளிட்ட ராஜபக்சவின் குடும்பத்தினர் பதவி விலகினார்கள் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் மீண்டும் இலங்கையில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதாகவும் போராட்டம் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இது குறித்து இலங்கை அரசு வெளியிட்ட உத்தரவில் அரசு அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது