திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (19:10 IST)

இலங்கை தமிழர்கள் 12 பேர் மணல்திட்டில் தவிப்பு: இந்திய கடற்படை மீட்பு!

refugees
இலங்கை தமிழர்கள் 12 பேர் மணல்திட்டில் தவிப்பு: இந்திய கடற்படை மீட்பு!
இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வர முயற்சித்த 12 பேர் இடையில் உள்ள மணல் திட்டில் தவித்த நிலையில் அந்தப் பக்கமாக வந்த இந்திய கடலோர காவல்படை அவர்களை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளது 
 
இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு இலங்கை அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர்
 
இந்த நிலையில் தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல்திட்டு  பகுதியில் உணவு தண்ணீரின்றி 12 பேர் தவிப்பதாக கடலோர காவல் படைக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அவர்கள் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களை மீட்டு பத்திரமாக தமிழகத்திற்கு அழைத்து வந்தனர்
 
காலை முதல் உணவின்றி தவித்த அவர்களுக்கு அங்கிருந்த மீனவர்கள் உணவு கொடுத்து உதவி செய்தனர் என்பதும் தற்போது அவர்கள் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது