1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (09:51 IST)

இலங்கை பள்ளி புத்தக அட்டையில் ஹாலிவுட் நடிகர் படம்? – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

இலங்கையில் பள்ளி பாடப்புத்தகத்தின் அட்டையில் ஹாலிவுட் நடிகர் படம் இடம்பெற்றுள்ளது வைரலாகியுள்ளது.

இலங்கையில் பள்ளி பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் அதில் உள்ள வேதியியல் புத்தகம் மட்டும் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. வேதியியல் புத்தகத்தின் அட்டைப்படத்தில் வேதியியல் உபகரணங்கள், அதை விஞ்ஞானிகள் கையாள்வது போன்ற படங்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளன. அதில் ப்ரேக்கிங் பேட் வெப் சிரிஸில் வரும் ஜெஸ்சி பிங்க்மேன் படமும் இடம்பெற்றுள்ளது.

ப்ரேக்கிங் பேட் தொடரில் வரும் இந்த பிங்க்மேன் கதாப்பாத்திரம் வேதியியல் ஆராய்ச்சி செய்பவர் மட்டுமல்லாமல், போதை பொருளை ரசாயனம் கலந்து கடத்தும் கதாப்பாத்திராமாகவும் வருவார். அவரது படம் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளது நெட்டிசன்கள் இடையே வைரலாகியுள்ளது.