ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2024 (07:57 IST)

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

நேற்று இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் அதிபர் அனுர குமாரா திசநாயகா கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதாக சற்று முன் தகவல் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபராக அனுர குமாரா திசநாயகா பதவியேற்ற நிலையில், தற்போது இலங்கை பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவிய நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கும் முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கேவின் கூட்டணிக்கும் இடையே தான் முக்கிய போட்டி என்று கூறப்பட்டது. 8000 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் 225 எம்பிக்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த நிலையில் நேற்று இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்று அதிகாலை வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் அனுர குமார திஸாநாயக்க கட்சி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் ஆளும் கட்சி முன்னிலையில் இருப்பதாகவும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி பின்னணியில் இருப்பதாகவும் முதல் கட்ட முடிவுகள் தெரிவித்துள்ளன. இன்று மாலையே மொத்த முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva