1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Sputnik V come to public may first week

மே மாதத்தில் இருந்து ஸ்புட்னிக் வி பயன்பாடு!

ஸ்புட்னிக்
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி மே மாதம் தொடக்கத்தில் இருந்தே பயன்பாட்டுக்கு வரும் என சொல்லபப்டுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் லேப் அனுமதி பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் கட்டமாக 1,25 கோடி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்த ஊசிகளின் பயன்பாடுகள் மே முதல் வாரத்தில் இருந்தே வரும் என சொல்லப்படுகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அனுமதிக்கும் 60 ஆவது நாடு இந்தியா ஆகும்.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் பரவலைத் தடுப்பது சவாலாக உள்ளது… ராதாகிருஷ்ணன் தகவல்!