இன்னும் ஸ்டாக்கே வரலை.. நாளைக்கு 18+க்கு தடுப்பூசி உண்டா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
இந்தியா முழுவதும் நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி ஸ்டாக் வரவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆன்லைன் மூலமாக 1.33 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கான தடுப்பூசி இன்னும் வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ”ஸ்டாக் வந்தால்தான் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்துவதை தொடங்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதும் 18 வயதிற்கு அதிகமானவர்களுக்கு பல மருத்துவமனைகளில் விண்ணப்பிக்கும் வசதி இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.