மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை! – ஸ்பெயின் அரசு!
ஸ்பெயினில் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் பெண் சுதந்திரத்திற்காக பலரும் பேசி வரும் நிலையில் அந்தந்த நாடுகளும் பெண்களுக்கென பிரத்யேகமான சலுகைகளையும் அளித்து வருகின்றன. பொதுவாக அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பெறு விடுப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் ஸ்பெயின் அரசு பெண்களுக்கு புதிய விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி பெண்களுக்கு மாதம்தோறும் மாதவிடாய் ஏற்படும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்க ஸ்பெயின் அரசு முடிவெடுத்துள்ளது.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் முதன்முறையாக மாதவிடாய்க்கு விடுமுறை அளிக்கும் நாடாக ஸ்பெயின் பெருமை பெற்றுள்ளது.