வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 மே 2022 (18:44 IST)

எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்: பிரபல நிறுவனம் அறிவிப்பு

holiday
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று ஊழியர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது பெரும் 
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உலகம் முழுவதும் ஐடி நிறுவனங்களுக்கு சனி ஞாயிறு மட்டுமே விடுமுறையாக இருக்கும் நிலையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆக்சன் ஸ்டெப் என்ற நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது
 
இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வேலை செய்வார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக அந்நிறுவனத்தின் துணை தலைவர் தெரிவித்துள்ளார் 
 
இதேபோன்று மற்ற நிறுவனத்திலும் அறிவிப்பு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்