திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (07:57 IST)

ஆண் நண்பரே வெளியிட்ட ஆபாச வீடியோ: பிரபல பாப பாடகி தற்கொலை?

தென்கொரியா நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஹாராவின் ஆண் நண்பர் ஒருவர் அவரது ஆபாச வீடியோவை வெளியிட்டதால் சிறைக்கு தள்ளப்பட்ட நிலையில் நேற்று பாப் பாடகி ஹாரா திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணம் தற்கொலையா? கொலையா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 11 வருடங்களாக பாப் பாடகியாகவும், தொலைக்காட்சி நடிகையாகவும் இருந்து வரும் ஹாராவின் பல பாடல்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை என்பதும், ஹாராவின் முதல் சோலோ பாடல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி தென்கொரியா முழுவதும் பிரபலமானது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பாப் பாடகி ஹாரா கடந்த வாரம் ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் அதில் இருந்து மீண்டும் வந்த அவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இனி பாப் பாடலில் முழு கவனத்தை செலுத்தவுள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது திடீர் மரணம் அவரது ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது