வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (05:12 IST)

வடகொரியாவுக்கு முதல்முறையாக பதிலடி: தென்கொரியா ஏவிய ஏவுகணை வெற்றி

தென்கொரியா, ஜப்பான் மற்றும் உலக நாடுகளை அவ்வப்போது அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அணு ஆயுத சோதனை, மற்றும் நீண்ட தொலைவுக்கு சென்று தாக்குதல் நடத்தும் வல்லமையுள்ள ஏவுகணைகளை ஏவி வரும் நிலையில் முதல்முறையாக தென்கொரியாவும் சக்தி வாய்ந்த ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.



 


தென்கொரியாவின் இந்த ஏவுகணை 800 கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரியின் இலக்கை மிகத்துல்லியமாக தாக்குகிற வல்லமை படைத்தது என்பதும்  குறிப்பாக, வடகொரியாவின் எந்தப் பகுதிக்கும் சென்று இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தும் திறனைக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்கொரியா ஏவுகணையை ஏவிய ஒருசில நிமிடத்தில் அமெரிக்க அதிபர் டிரெம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இரு தலைவர்களும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி மிரட்டிக்கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவது பற்றி விவாதித்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வடகொரியா தொடர்ந்து அச்சுறுத்தல்கள் விடுத்து வரும் தருணத்தில், நட்பு நாடுகளான ஜப்பானுடனும், தென் கொரியாவுடனும் அமெரிக்கா ஒன்றுபட்டு நிற்கிறது என ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயிடம் ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்திக்கூறினார்’’ என கூறப்பட்டுள்ளது.