வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (18:21 IST)

டூப் போடாமல் மிதி வாங்கிய ‘கயல்’ சந்திரன்

டூப் போடாமல் மிதி வாங்கியதால், ‘கயல்’ சந்திரன் முகத்தில் ரத்தம் வழிந்திருக்கிறது.


 
 
பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரன். அதன்பிறகு ‘ரூபாய்’ மற்றும் ‘கிரகணம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவருடைய அண்ணன் ரகுநந்தன் தயாரிப்பில் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தில் நடித்துள்ளார்.
 
சுதர் இயக்கியுள்ள இந்தப் படம், உலகக் கோப்பையைத் திருடுவதுதான் கதை. ஒவ்வொரு காட்சியையும் சிரிக்கும் வகையில் எடுத்திருக்கிறார்களாம். இந்தப் படத்தில் ஒரு ஸீனில் ஷூ காலால் சந்திரனை மிதிப்பது போன்ற காட்சி இருக்கிறதாம்.
 
டூப் போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னபோது மறுத்த சந்திரன், தானே அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார். அப்போது ஒருவர் நிஜமாகவே சந்திரனை மிதித்துவிட, ரத்தம் வழிந்திருக்கிறது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் நடித்திருக்கிறார் சந்திரன்.