1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (12:41 IST)

ரொமான்ஸில் உச்சத்தை தொட்ட விஜய்சேதுபதி - ட்ரெண்டான சங்கத்தமிழன் பாடல் வீடியோ!

விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படத்தின் சண்டக்காரி நீதான் என்ற ரொமான்டிக் பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. 


 
சிம்பு நடித்த 'வாலு' மற்றும் விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' படங்களை இயக்கிய விஜய்சந்தர் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் சங்கத்தமிழன்  இயக்கி வருகிறார். இந்த படத்தை விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். மேலும் நாசர் ,சூரி ,ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன்,மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  
 
சமீப நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை அடுத்து தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் நேற்று இப்படத்தில் இடம்பெறும்  "சண்டக்காரி நீதான்" என்ற மெலோடி பாடல் வீடியோ வெளியானது. 
 
விவேக்-மெர்வின் இசையில் அனிருத் பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களின் மனதை வெகுவாக ஈர்த்துள்ளது. மென்மையான இசையில் விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜின் அழகிய  ரொமான்ஸ் காட்சிகளில் காதலர்களின் கண்களுக்கு இதமாக அமைந்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர்  மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.