வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (14:01 IST)

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் எங்கே? 3 தனிப்படைகள் அமைப்பு.! தேடும் பணி தீவிரம்.!!

dmk mla son
வீட்டில் பணிபுரிந்த 18 வயது இளம்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளை பிடிக்க போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.
 
சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கருணாநிதி. இவரது மகன் ஆண்டோ வீட்டில் 18 வயது இளம் பெண் ஒருவர் பணிபுரிந்து வந்தார். அந்தப் பெண்ணை ஆண்டோவும், அவரது மனைவி மெரலினாவும் சேர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.
 
அந்தப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியும், கைகளில் சிகரெட்டால் சூடு வைத்தும், துன்புறுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில்,  திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்டோ, அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இருவரும் தலைமறைவாகினர்.


இந்நிலையில் இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன், மருமகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்த போலீசார், அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.