செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (22:25 IST)

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக்த்தில் துப்பாக்கிச் சூடு! 3 பேர் பலி

Death
அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில்,  லாஸ் வேகாஸ் நகரில் உள்ள நெவாடா  பல்கலைக்கழகத்தில் மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

நேற்று காலை இப்பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.  அங்கு இருந்த மர்ம நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது