திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (07:37 IST)

வங்கதேசத்தில் அடுத்த பிரதமர் யார்? வாக்குப்பதிவு முடிவுகள் வெளியீடு..!

வங்கதேசத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலுக்கு பின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் வெற்றி பெறுவது யார் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.  

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் 350 தொகுதிகள் உள்ள நிலையில் அதில் 50 தொகுதிகளில் பெண் எம்பிக்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இதனை அடுத்து 300 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் நேற்று 299 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஐநூறுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியிட்ட நிலையில்  தேர்தலுக்குப் பின் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தற்போதைய பிரதமருக்கு ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொள்வார் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது

 இந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஷேக் ஹசீனா முன்னணியில் இருப்பதாகவும் அவரது கட்சி ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை வந்துள்ள தகவலின் படி ஷேக் ஹசீனா கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டதை அடுத்து மீண்டும் அவர் பிரதமர் ஆவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva