1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (10:15 IST)

போக்குவரத்தை சரிசெய்யும் ‘குட்டிப்புலி’ ரோபோ!.. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்..!

போக்குவரத்தை சரிசெய்யும் ‘குட்டிப்புலி’ ரோபோ!.. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்..!
பொதுவாக போக்குவரத்து காவலர்கள் மட்டுமே போக்குவரத்தை சீர்செய்வார்கள். ஆனால், சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில், ஒரு ரோபோ போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 'குட்டிப் புலி' என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவின் செயல்பாடுகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன.
 
இந்த ரோபோவுக்கு பயிற்சி அளித்துள்ள ஷாங்காய் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், இது தற்போது சோதனை முறையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ரோபோவின் செயல்பாடு வெற்றிகரமாக இருந்தால், எதிர்காலத்தில் போக்குவரத்து ரோபோக்களை நிரந்தரமாக பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
 
இந்த ரோபோ, போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து எச்சரிக்கை செய்வது, போக்குவரத்து சமிக்ஞைகளை வழங்குவது, பாதசாரிகளுக்கு உதவுவது என பல பணிகளை செய்யும் திறன் கொண்டது. இந்த ரோபோவின் வருகை, போக்குவரத்து காவலர்களின் பணிச்சுமையை குறைத்து, சாலை பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran