1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சிட உதவும் அழகு குறிப்புகள்...!

1. மூக்கின் அருகில் கறுப்பு நிறம் இருந்தால், மோரில் நனைத்த பஞ்சால் அதன்மீது தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.  இப்படி தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் கறுப்புத் திட்டு காணாமல் போய்விடும்.



2. பச்சைப் பயிறை சலித்து எடுத்து கோதுமைத் தவிட்டைக் கலந்து குளித்தால் தோலில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.
 
3. உலர்ந்த நெல்லி முள்ளியுடன் பயத்தம் பருப்பு சேர்த்து அரைத்து உடலுக்கு பூசிக் குளித்தால் சரும நோய்கள் வராது.
 
4. தயிரில் ஊறவைத்த வெள்ளரித் துண்டுகளை சாப்பிட்டால் உடல் சூடு உடனே தணியும்.
 
5. கற்பூரத் தைலம் கடைகளில் கிடைக்கிறது. இதை முகத்தில் தடவி, ஐந்து நிமிடம் ஊறியபின் முகம் கழுவினால்  கரும்புள்ளிகள் நீங்கும்.
 
6. சந்தனக் கல்லில் ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்குமுன் கண்ணைச் சுற்றி தடவிக் கொண்டு உறங்குங்கள். பத்து நாட்கள் இதை தொடர்ந்து செய்தால் கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும். கண்சோர்வு, அயர்ச்சியினால் ஏற்படும் கருமையை சந்தனம் மற்றும் ஜாதிக்காயில் உள்ள குளுமை மாற்றி, கண்ணுக்கு பத்துணர்ச்சியைத் தரும். முகப் பருக்களுக்கும்  இது சிறந்த நிவாரணி.
 
7. பூஜை மற்றும் பண்டிகைகளுக்கு உபயோகிக்கும் பூக்களை தூக்கி எறிந்துவிடாமல், காய வைத்து ஃபேஷியல் பவுடர் செய்யலாம். ரோஜா, செம்பருத்தி, மரிக்கொழுந்து, மல்லி, தாழம்பூ மடல்களை உதிர்த்துக் காயவையுங்கள். இதனுடன் காயவைத்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுத் தோல்களை சிறிதாக நறிக்கிச் சேர்க்கவும். பூக்கள், தோலுடன் முழுப்பயிறு, கஸ்தூரி  மஞ்சள், வெட்டிவேர் ஆகியவற்றை சேர்த்து மெஷினில் அரைத்து வைத்துக்கொள்ளவும். 2 ஸ்பூன் பொடியுடன் அரை எலுமிச்சம்  பழச் சாறு அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊறியபின் குளிர்ந்த நீரில் முகம் கழுவவும். முகம்  பளிச்சன்று மென்மையாக இருப்பதை கண்கூடாகக் காணலாம்.