வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

இயற்கையான முறையில் முகத்தை பளபளக்க செய்யும் அழகு குறிப்புகள்

வைட்டமின் E மாத்திரைகளை வாங்கி, அதனுள் இருக்கும் எண்ணெயை எடுத்து முகச்சுருக்கங்களில் தடவி மாசாஜ் செய்து வந்தால், சுருக்கங்கள் மறைந்து முகம் அழகாக இருக்கும்.

 
சோப்புக் குளியல்தான் முழுமையான குளியல் என்றில்லை. கடலைமாவை எலுமிச்சம் பழச்சாறில் குழைத்து, சோப்புக்குப் பதில் உபயோகிக்கலாம். இதேபோன்று, கோதுமைத் தவிட்டையும் உபயோகிக்கலாம். இதனால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதாக உதிர்ந்து தேகம் புத்துணர்வு பெறும்.
 
நெல்லிக்காய்களின் கொட்டைகளை எடுத்துவிட்டு, எலுமிச்சம் பழச்சாறு விட்டு அம்மியில் வைத்து அரைத்து, மாதம் ஒரு தடவை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்றுவிடும். இளநரை இருந்தாலும், சில நாட்களில் மறைய  ஆரம்பிக்கும்.
 
நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீராவியில் முகத்தைக் காட்டினால், முகத்தின் நுண்ணிய வியர்வைத் துவாரங்களில்  உள்ளஅழுக்குகள் வெளியேறும். பருக்கள் வராது.
 
சிலருக்கு முன் மற்றும் பின் கழுத்து கருமையாகக் காணப்படும். இதைப் போக்க நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்  பீர்க்கங்காய் கூடு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போது கழுத்தில் நன்கு சோப்பு தடவி பீர்க்கங்காய் கூடால் நன்கு தேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம் மாறி இயற்கையான நிறம் வந்துவிடும்.
 
வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பு அடையும். முக அழகைக் கொடுக்கும் தேமலை அகற்ற எலுமிச்சம் பழச்சாறுடன் துளசி இலைச்சாறைச் சேர்த்துத் தடவி வரவேண்டும்.
 
முகத்துக்கு மேக்கப் போடுவதற்குமுன் லேசாக முகம் முழுவதும் பன்னீரைத் தடவினால், சருமம் மென்மையாக இருக்கும்.  நீண்ட நேரம் மேக்கப் கலையாமலும் இருக்கும்.
 
உப்பு கலந்த எலுமிச்சம்பழச் சாறை பற்களில் தேய்த்தால், பற்களில் உள்ள கறை மறையும், ஈறுகளில் உள்ள கறை மறையும்.  ஈறுகள் பலம் பெறும்.