35 வருடங்களுக்கு பின் சவுதி அரேபியாவில் திறக்கப்படும் தியேட்டர்கள்
அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் கடந்த பல வருடங்களாக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் சமீபத்தில் இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் சவுதியில் பெண்கள் காரோட்ட அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு தியேட்டர்கள் செயல்படவும் இளவரசர் அனுமதியளித்துள்ளார். இதனால் 35 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சவுதியில் திரையரங்குகள் செயல்படவுள்ளன
வரும் 2018ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் திரையரங்குகள் புத்தம் புது பொலிவுடன் திறக்கப்படவுள்ளதாகவும், மற்ற நாட்டு மக்கள் போல் இனி சவுதி மக்களும் தியேட்டருக்கு சென்று திரைப்படங்களை பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.