செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2017 (02:03 IST)

உலகப்புகழ் பெற்ற லைகா நிறுவனத்தை முந்திய நயன்தாரா படம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம் இதுதான் என பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் கடந்த மூன்று நாட்களில் சுமார் ரூ.6 கோடியை நெருங்கிவிட்டது.


 


ஆனால் உலகப்புகழ் பெற்ற லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படை வெல்லும்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி 'அறம்' படத்தை விட குறைவான வசூலையே பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி அறம்' படத்தின் பட்ஜெட்டை விட 'இப்படை வெல்லும் 'படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் 'அறம்' லாபத்தை நோக்கி செல்கிறது, இப்படை வெல்லும் படம் அசலை எடுக்கவே திணறி வருவதாக கூறப்படுகிறது.

'அறம்' திரைப்படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் ரூ.5.6 கோடி வசூல் செய்துவிட்டது. திங்கட்கிழமை வசூலை சேர்த்தால் ரூ.7 கோடியை நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது. 'இப்படை வெல்லும்' படத்தின் வியாழன் முதல் ஞாயிறு வரையிலான 4 நாட்களின் வசூல் ரூ.6.4 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது.