1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (21:45 IST)

நடிகர் சிம்புவின் உடல்நிலை குறித்த முக்கிய தகவல்

நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
வெங்கட் பிரபு  இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் தற்போது ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார்.
 
இந்நிலையில், நடிகர் சிலம்பரசனுக்கு இன்று திடீரென காய்ச்சல் ஏற்படுவதாகவும் இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. 
 
பின்னர்,சிம்வுக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் வரைஸ் காய்ச்சல் தீவிரமாக இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில், சிம்பு தற்போது நலமாக உள்ளதாகவும் அவருக்கு சாதாரண  வைரஸ் காய்ச்சல் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.