திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 12 டிசம்பர் 2019 (16:28 IST)

ரஜினிக்கு தமிழில் டுவிட் செய்து வாழ்த்திய சச்சின் தெண்டுல்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் காலை முதலே குவிந்து வருகின்றன  என்பது தெரிந்ததே. திமுக தலைவர் முக ஸ்டாலின், நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான கமலஹாசன் மற்றும் திரையுலகினர், அரசியல்வாதிகள், தேசிய அளவில் உள்ள அரசியல்வாதிகள் என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே வருகிறது
 
இந்த நிலையில் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு தமிழில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
மேலும் அவர் ரஜினி குறித்து கூறிய போது ’திரையில் அவருடைய ஸ்டைலும் திரைக்கு வெளியே அவருடைய மனிதநேயமும் தான் அவரை ஒவ்வொருவர் தர்பாரிலும் தலைவா என வைத்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். சச்சினின் இந்த டுவீட்டிற்கு நெட்டிசன்களிடையே அமோக ஆதரவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது