1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (11:53 IST)

நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! – என்ன ஆனது? கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை!

நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! – என்ன ஆனது? கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை!
ரஷ்யாவில் 28 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று வானில் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் ஏஎன்26 என்ற பயணிகள் விமானம் 28 பயணிகளுடன் பெட்ரோபாவ்லோஸ்க்கிலிருந்து கம்சாட்ச்கி தீபகற்பம் நோக்கி பயணித்துள்ளது. கம்சாட்ச்கி தீபகற்பத்தின் வடக்கு பகுதியிலுள்ள பலானா பிராந்தியம் அருகே விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததுடன், ரேடார் சிக்னல்களும் நின்றுள்ளன.

இதனால் ரஷ்ய விமானம் ஏஎன்26 மாயமானதாக அறிவிக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.