1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (09:37 IST)

ரஷ்ய ராணுவ சரக்கு விமானம் விபத்து! ; 3 பேர் பலி!

Flight
ரஷ்யாவில் ராணுவ விமானம் ஒன்று தரையிறங்கியபோது நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

ரஷ்யாவில் இல்யுஷின் ஐஎல் 76 என்ற ராணுவ சரக்கு விமானம் ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள ரியாசன் என்ற நகரத்திற்கு 9 பேர் கொண்ட குழுவுடன் புறப்பட்டு சென்றுள்ளது. தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்ஜின் பழுதானதே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.