1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:31 IST)

ரஷ்ய தூதர் துருக்கியில் சுட்டு கொலை!!

துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோவை, துருக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த, புகைப்பட கண்காட்சியில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோவ் கலந்து கொண்டார். அதில் அவர் பேச துவங்கிய போது, ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத்துவங்கினார்.
 
இதில் ஆண்டிரே கார்லோ உடலின் பல இடங்களில் குண்டு பாய்ந்து பலியானார். இதை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது. 
 
இந்த தாக்குதலில், ஆண்டிரே கார்லோவை சுட்டுக்கொன்ற நபர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர தூதரை சுட்டு கொன்றவர், பணியில் இல்லாத துருக்கி போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.