திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 மார்ச் 2022 (15:36 IST)

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இறக்கிய ரஷ்யா! – உலக நாடுகள் அதிர்ச்சி!

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை கொண்டு தாக்கியதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் பல நகரங்களை கைப்பற்றியுள்ளது.

ரஷ்யாவின் குண்டு வீச்சு தாக்குதலால் பல இடங்களில் பதுங்கியிருந்த பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பல மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போரின் 25வது நாளான இன்று ரஷ்யா உக்ரைன் நகரங்கள் மீது ஒலியை விட வேகமாக பயணிக்கக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை கொண்டு தாக்கியுள்ளது. இதுவரை இரண்டு முறை ஹைபர்சோஒனிக் ஏவுகணைகளை கொண்டு உக்ரைனின் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.