1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (18:50 IST)

உக்ரைன் அதிபர் பெயரில் டீத்தூள்: அசாம் நிறுவனம் அறிவிப்பு

உக்ரைன் அதிபர் பெயரில் டீத்தூள்: அசாம் நிறுவனம் அறிவிப்பு
உக்ரைன் அதிபர் பெயரில் டீத்தூள் ஒன்றை தயாரிக்க இருப்பதாக அசாம் மாநிலத்தில் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 
 
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் நாடு கடும்போர் புரிந்து வருகிறது என்பதும் இந்த போரில் பின்வாங்காமல் தைரியமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த போரை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் சூழலில் உக்ரைன் அதிபரின் துணிச்சலை கௌரவிக்கும் வகையில் அவரது பெயரில் டீத்தூள் ஒன்றை அசாம் தனியார் டீத்தூள் நிறுவனம் அறிவித்துள்ளது இந்த டீத்தூளை வாங்குவதற்கு பொது மக்கள் போட்டி போட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.