விளம்பரங்களில் நடிக்காத விஜய் சேதுபதி; தற்போது நடிப்பதற்கான காரணம் இதுதானா??
நடிகர் விஜய் சேதுபதி தனது இயல்பான நடிப்பில் மக்கள் மனதில் இடம் பெற்று தற்போது அனைவராலும் விரும்பப்படும் நடிகராக உள்ளார்.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி ரூ.50 லட்சத்தை அனிதாவின் நினைவாக அரியாலூர் மாவட்டத்திற்கும் தமிழக பள்ளிகளுக்கும் வழங்க உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு, நான் விளம்பரப்படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.
இப்போது அணில் ப்ராண்ட் விலம்பரத்தில் நடித்து உள்ளேன். இதன் மூலம் கிடைத்த தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவி தொகைக்காக வழங்க முடிவு செய்துள்ளேன்.
அரியலூர் மாவட்டதில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் ரூ.38,70,000-த்தை வழங்க உள்ளேன்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு ரூ.50,000 வீதம் 5,00,000 ரூபாயும், 11 அரசு செவித்திறன் குறைதோர் பள்ளிகளுக்கு தலா 50,000 வீதம் ரூ.5,50,000 வழங்க உள்ளேன்.
அதோடு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறைதோர் பள்ளிக்கு ரூ.50,000 என மொத்தம் 49,70,000 ரூபாயை தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.