செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2017 (13:54 IST)

அமெரிக்காவை எந்த நேரத்திலும் தாக்குவோம்; ரஷ்யாவுக்கு கடிதம் அனுப்பிய வடகொரியா

அமெரிக்காவின் முக்கிய நகரங்களை குறிவைத்து எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்க வடகொரியா தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கிம் ஜாங் யுன் குறிப்பிட்டுள்ளார்.


 

 
வடகொரியா தொடர்ந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. வட்கொரியாவின் அணு ஆயுத சோதனை தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களாக வடகொரியாவை கேலி செய்து பதிவிட்டார்.
 
டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்ட வந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் முக்கிய நகரங்களை குறிவைத்து எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்க வடகொரியா தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கிம் ஜாங் யுன் குறிப்பிட்டுள்ளார்.
 
இதையடுத்து ரஷ்ய ஜனாதிபதி விளட்மிர் புதின், அமெரிக்கா மற்றும் வடகொரிய நாடுகள் கட்டுபாட்டுடன் இருக்கவும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முயற்சிக்கவும் என கோரிக்கை விடுத்தார்.
 
இதன்மூலம் அமெரிக்க மீதான வடகொரியா தாக்குதல் 51% உறுதி செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.