வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (08:18 IST)

ரஷ்யாவை உலுக்கிய நிலநடுக்கம்! – ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!

ரஷ்யாவில் இன்று அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2020ம் ஆண்டு தொடங்கியது முதலாக உலகம் முழுவதும் பல்வேறு பேரிடர்களை சந்தித்து வருவதாக பலர் நம்புகின்றனர். அதற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் முதற்கொண்டு பல இயற்கை பேரிடர்களையும் பல நாடுகள் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரிலிருந்து தென் கிழக்கில் 80 கி.மீ தூரத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.