வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (12:15 IST)

இந்தோனேஷியாவில் வெடித்த எரிமலை; விமான நிலையத்தில் சாம்பல் மழை!

எரிமலைகளின் பிரதேசமான இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த எரிமலை ஒன்று வெடித்து சிதறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகிலேயே அதிகமான எரிமலைகள் செயல்பாட்டில் உள்ள நாடு இந்தோனேஷியா. இதனால் அடிக்கடி அங்கு எரிமலை வெடிப்புகள் நடந்து வருகின்றன. இந்தோனேஷியாவில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகளில் ஒன்றான இலி எரிமலை நேற்று வெடித்தது. இதனால் வான் மேகங்களை தாண்டி பல மீட்டர் தூரத்திற்கு புகை எழுந்தது. எரிமலையிலிருந்து வெளியேறிய லாவா குழம்பு சுற்றியுள்ள பகுதிகள் வரை சென்றதாக கூறப்படுகிறது.

முன்னதாகவே எரிமலை வெடிப்பை கணித்திருந்த இந்தோனேசிய அதிகாரிகள் எரிமலை சுற்றி 2 கி.மீ தூரத்திற்கு செல்வதற்கு தடை விதித்திருந்த நிலையில் அதை 4 கி.மீ ஆக அதிகரித்தனர். இந்த எரிமலை வெடிப்பால் அருகே இருந்த உள்ளூர் பயணிகள் விமான நிலையமான நுசா தெங்கராஸில் சாம்பல் மழை பொழிந்தது. இதனால் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.